Wednesday, March 7, 2012

சமுதாய பிரிவினை கொடிய பாவம். கூறுவது அல்குர்ஆன்

1. “ எவர்கள் தங்களிடம் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப்போல நீங்களும் ஆகி விட வேண்டாம். இத்தகையவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு. ” –அல் குர்ஆன். 3:105.

2. “ எவர்கள் தங்கள் மார்க்கத்தை பிரித்து (அவர்களும்) பல பிரிவினராக ( JAQH, TNTJ, INTJ etc…) பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உங்களுக்கு யாதொரு சம்பந்தமுமில்லை. . . . . ” –அல் குர்ஆன். 6:159.

3. “ எனினும் ( யூதர்கள், கிறிஸ்தவர்கள், இயக்க ஆலிம்கள் ) தங்களுடைய வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ளவற்றைக்கொண்டு சந்தோசம் அடைகின்றனர். நீங்கள் அவர்களை ஒரு காலம் வரையில் அவர்களுடைய மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்க விட்டு விடுங்கள். ” –அல் குர்ஆன். 23:52-53.

4. “ எவர்கள் தங்கள் மார்க்கத்திற்க்குள் பிரிவினையை உண்டு பண்ணி பல பிரிவுகளாக பிரித்து, அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான) வைகளைக்கொண்டு சந்தோசப்ப்படுகின்றனரோ ( அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்). ” –அல் குர்ஆன். 30:32.

No comments:

Post a Comment